நோலன் கன்னிகளின் ஆதரவால் ரி ரிலீஸில் கலக்கும் இண்டர்ஸ்டெல்லார்..!
ஹாலிவுட்டில் வித்தியாசமான பல அறிவியல் புனைவுப் படங்களை இயக்கும் இயக்குனர் கிறிஸ்டோபர் நோலனுக்கு உலகம் முழுவதும் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இந்தியாவில் நோலன் கன்னிகள் என்றொரு பெரிய ரசிகர் பட்டாளமே உள்ளது.
2014ல் இவர் இயக்கத்தில் வெளியான இண்டெஸ்டெல்லார் திரைப்படம் உலக அளவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. நோலன் ரசிகர்களால் இன்றளவும் மிகவும் கொண்டாடப்படும் படமாக இண்டெஸ்டெல்லார் உள்ளது. கடந்த 2024ம் ஆண்டுடன் இண்டெஸ்டெல்லார் வெளியாகி 10 ஆண்டுகள் நிறைவடைந்ததை கொண்டாடும் விதமாக உலகமெங்கும் ரீ ரிலீஸ் செய்யப்பட்டது.
னால் அந்த சமயம் இந்தியாவில் புஷ்பா 2 உள்ளிட்ட பல படங்கள் வெளியாகியிருந்ததால் இண்டெஸ்டெல்லார் படத்திற்கு ஐமேக்ஸ் திரையரங்குகள் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டது. இதனால் இண்டெஸ்டெல்லார் இந்தியாவில் ரிலீஸ் ஆகாததால் நோலன் ரசிகர்கள் சோகத்தில் ஆழ்ந்தனர். இதையடுத்து பிப்ரவரி 7 ஆம் தேதி இண்டர்ஸ்டெல்லர் ரி ரிலீஸானது.
முதல் ரிலீஸைப் போலவே ரி ரிலீஸிலும் இந்த படம் நல்ல வசூலைப் பெற்று வருகிறது. இந்தியாவில் முதல் மூன்று நாட்களில் மட்டும் சுமார் 9 கோடி ரூபாய் வரை வசூலித்துள்ளதாக சொல்லப்படுகிறது. இது ஒரு ரி ரிலீஸ் படத்துக்கு மிகப்பெரிய வசூல் என்பது குறிப்பிடத்தக்கது.