வியாழன், 23 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: ஞாயிறு, 9 ஆகஸ்ட் 2020 (17:46 IST)

விஜய்க்கு சவால் விட்ட தெலுங்கு சூப்பர் ஸ்டார் நடிகர் மகேஷ் பாபு!

நடிகர் மகேஷ் பாபு தனது பிறந்தநாளை முன்னிட்டு சுற்றுச்சூழலை பாதுகாக்கும் சவால் ஒன்றை நடிகர் விஜய்க்கு விடுத்துள்ளார்.

தெலுங்கு நடிகரான மகேஷ் பாபுவின் 45 ஆவது பிறந்தநாள் இன்று தெலுங்கு சினிமா ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. இவர் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜய்க்கு மிகவும் நெருக்கமானவர். மகேஷ் பாபு நடித்த ஒக்கடு மற்றும் போக்கிரி ஆகிய படங்களை விஜய் ரீமேக் செய்து நடித்து தனது சினிமா கேரியரை அடுத்தக் கட்டத்துக்கு உயர்த்தினார்.

இதையடுத்து தனது பிறந்தநாளை கொண்டாடும் விதமாக செடி ஒன்றை நட்டு  ‘எனது பிறந்தநாளைக் கொண்டாட இதைவிட சிறந்த வழி இருக்க முடியாது. இதை நடிகர்கள் விஜய், ஜூனியர் என்டிஆர், நடிகை ஷ்ருதிஹாசன் ஆகியோர் இந்த சங்கிலியைத் தொடர வேண்டும்.’ என வேண்டுகோள் விடுத்துள்ளார்.