புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By VM
Last Modified: புதன், 21 நவம்பர் 2018 (14:20 IST)

அசலை விட அதிகமாக ரசிப்பீங்க: முத்து படம் குறித்து ரஜினி பேச்சு

முத்து திரைப்படம் ஜப்பானில் ரீரிலீஸ் ஆவது குறித்து பேசிய ரஜினி, அசலைவிட இது உங்களுக்குப் பிடிக்கும் என நம்புவதாக தெரிவித்துள்ளார்.
Rajnikanth , Muthu, Japan
 
கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் - மீனா நடிப்பில்  1995ம் ஆண்டு வெளியான படம் முத்து. தமிழகத்தில் சூப்பர் ஹிட்டானது. இந்நிலையில் 1998-ல்  'முத்து டான்சிங் மஹாராஜா  என்ற பெயரில் ஜப்பானில் வெளியாகி அங்கு பெரும் ஹிட்டானது.
 
இந்நிலையில் இந்த திரைப்படத்தின் ஜப்பானிய பதிப்பான 'முத்து டான்சிங் மஹாராஜா (Muthu Dancing Maharaja)'  4k, 5.1CH தொழில்நுட்ப மேம்பாட்டுடன் மீண்டும் வெளியாகவுள்ளது. டிசம்பர் மாதம் படம் திரைக்கு வர உள்ளது..
 
இது குறித்து விளம்பர வீடியோவில் ரஜினிகாந்த் பேசியிருப்பதாவது: "முத்து நிறைய மக்களின் அபிமானத் திரைப்படம். ஜப்பானிய மக்களுக்கும் இந்தத் திரைப்படம் பிடித்ததில் எனக்கு மகிழ்ச்சி. இந்தப் படத்தை நிறைய ஜப்பானியர்கள் பார்த்திருக்கின்றனர். இன்னும் நிறைய பேர் பார்க்க வேண்டும் என விரும்புகிறேன். கவிதாலயா நிறுவனம் இப்படத்தை 4கே வெர்ஷனில் அப்கிரேட் செய்திருப்பதில் எனக்கு மகிழ்ச்சி. ரஹ்மானும் பின்னணி இசையெல்லாம் மேம்படுத்தியிருக்கிறார். இந்த மேம்படுத்தப்பட்ட வெர்சனை நீங்கள் அசலைவிட அதிகமாக ரசிப்பீர்கள் என 100% நம்புகிறேன்" என தெரவித்துள்ளார்