வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By VM
Last Modified: செவ்வாய், 20 நவம்பர் 2018 (10:46 IST)

தமிழ்நாட்டைவிட ஆந்திராவில் அதிக திரையரங்குகளில் வெளியாகும் '2.o'

ஷங்கர் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்துள்ள '2.o'  திரைப்படம் வரும் 29ம் தேதி உலகம் முழுவதும் வெளியாகிறது.

இந்த படத்தில் ரஜினி,  விஞ்ஞானி மற்றும் ரோபோ ஆகிய இரண்டு வேடத்தில் நடித்திருக்கிறார். வில்லனாக அக்ஷயக்குமார் நடித்துள்ளார்.  ரஜினிக்கு ஜோடியாக ஏமி ஜாக்சன் நடித்துள்ளார்.  தமிழ், தெலுங்கு மற்றும் இந்தியில் ஒரே நேரத்தில் வெளியாகிறது. 
 
'2.o'  படத்தின் முந்தைய பாகமான எந்திரன் திரைப்படம் ஆந்திராவிலும், அமெரிக்காவிலும் வசூலை வாரிகுவித்தது.  இதனால் தமிழ்நாட்டைவிட தெலங்கானா மற்றும் ஆந்திராவில் அதிக திரையரங்குகளில் '2.o' திரைப்படம் வெளியாகிறது. அகில இந்திய அளவில் பாக்ஸ் ஆபிஸ் வசூலில் தமிழைப் போல் தெலுங்கிலும் நல்ல வசூல் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பால் '2.o'  திரைப்படம் தெலுங்கில் அதிக திரையரங்குகளில் வெளியாக உள்ளது. 
 
600  கோடி செலவில் லைகா நிறுவனம் இந்த படத்தை பிரம்மாண்டமாக தயாரித்துள்ளது. ஹாலிவுட் தரத்தில் தொழில்நுட்ப பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதால் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.