திங்கள், 27 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By VM
Last Modified: செவ்வாய், 20 நவம்பர் 2018 (11:39 IST)

'2.o' ஜுரம்! இந்த வாரமே தமிழில் ஏழு படங்கள் ரிலீஸ்!

நவம்பர் 23ம் தேதி தமிழில் ஏழு திரைப்படங்கள் வெளியாக உள்ளது.
 
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள '2.o' திரைப்படம் வரும் நவம்பர் 29ம் தேதி வெளியாக உள்ளது.  இதனால் சிறிய பட்ஜெட் படங்களை அப்போது வெளியிட்டால் திரையரங்குகள் கிடைப்பது  கடினமாகிவிடும் . இதேபோல் அடுத்த மாதம் பல பெரிய படங்கள் வெளியாக உள்ளதால் சிறிய படங்களுக்கு திரையரங்குகள் கிடைக்காது. இதற்கிடையே  இந்த வாரம் எந்த பெரிய படமும் வெளியாகப் போவதில்லை. இதனை பயன்படுத்தி 23ம் தேதி (வெள்ளிக்கிழமை) மட்டும் 7 சிறிய படங்கள் ரிலீஸ் ஆக உள்ளது. 
 
செய், கரிமுருகன், பட்டினம்பாக்கம், வினை அறியான், கார்த்திகேயனும் காணாமல் போன காதலியும், வண்டி, செம்மறி ஆடு ஆகிய 7 படங்கள் ரிலீஸ் ஆகிறது.