வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: செவ்வாய், 20 நவம்பர் 2018 (11:14 IST)

'2.o' தமிழகத்தில் மட்டும் இத்தனை கோடிக்கு வியாபாரமா? மிகப்பெரிய சாதனை

ஷங்கர் இயக்கத்தில்  ரஜினி நடித்துள்ள படம் '2.o'.   இதில் வில்லன் வேடத்தில் அக்ஷயக்குமார் நடித்துள்ளார். இதுதவிர ஏமி ஜாக்சன், சுதஷ்ணு பாண்டே, அதில் ஹுசைன், கலாபவண் ஷஜோன் மற்றும் ரியாஸ் கான் ஆகியோர் நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். டிரைலர் மற்றும் பாடல்கள் ஏற்கனவே வெளியாகிவிட்டது.
 
இந்த படத்தை லைகா புரொடக்சன்  மிகப்பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரித்துள்ளது. நவீன கிராபிக்ஸ் தொழில்நுட்பத்தில் சயின்ஸ் பிக்சர்ஸ் திரில்லர் படமாக உருவாகி உள்ளது.  வரும் 29ம் தேதி உலகம் முழுவதும் வெளியாகிறது. இதற்கான முன் வியாபாரம் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. தமிழநாட்டில் திரையங்களில்   வெளியிடும் உரிமை சுமார் 120 கோடிக்கு வியாபாரம் ஆகி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் மட்டுமே முன் வியாபாரத்தில் 100 கோடி ரூபாயை கடந்த முதல்  தமிழ் சினிமா என்ற பெருமையை '2.o' பெற்றுள்ளது.