திங்கள், 27 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : வியாழன், 14 மார்ச் 2019 (13:11 IST)

இணையத்தில் வைரலாகும் ஹாரிஸ் கல்யாணின் இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் ஸ்னீக் பீக்!

‘பியார் பிரேமா காதல்’ படத்தின் வெற்றியை தொடர்ந்து நடிகர் ஹாரிஸ் கல்யாண் நடிப்பில் உருவாகியுள்ள ‘இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்’ திரைப்படத்தின் சில நிமிட காட்சிகள் கொண்ட வீடியோ இணையத்தில் வெளியாகி ட்ரெண்டிங்காகி வருகிறது. 


 
‘புரியாத புதிர்’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான ரஞ்சித் ஜெயக்கொடியின் அடுத்த படமான  இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் படத்தில்  ஹரிஷ் கல்யாணுக்கு ஜோடியாக ஷில்பா மஞ்சுநாத் நடிக்கிறார்.  இந்த படம் மார்ச் 15ம் தேதி வெளியாக இருக்கிறது.
 
சாம் சி.எஸ். இசையமைக்கும் இந்த படத்திற்கு கவின் ராஜ் ஒளிப்பதிவு செய்கிறார். படத்தின் போஸ்ட் புரோடுக்ஷன் பணிகளில் தீவிரம் காட்டிவரும் படக்குழு தற்போது படத்தின் மீது எதிர்பார்ப்பை ஏற்படுத்த ஸ்னீக் பீக் ஒன்றை வெளியிட்டுள்ளனர். 
 
இப்படத்தில் இடப்பெறும் சித்தர் என்ற பாடலை மக்கள் செல்வன் விஜய்சேதுபதி பாடியுள்ளதாகவும் தகவல்கள் கிடைத்துள்ளது.