1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : புதன், 27 பிப்ரவரி 2019 (17:40 IST)

இணையத்தில் தாண்டவமாடும் ஓவியா பட முதலிரவு காட்சி!

அனிதா உதீப் இயக்கத்தில் ஓவியா நடிப்பில் உருவாகியுள்ள அடல்ட் ஒன்லி திரைப்படமான 90 எம்.எல். வெளியாவதற்கு முன்பே அடுத்தடுத்து சர்ச்சையில் சிக்கிவருகிறது. 


 
சிம்பு இசையமைத்திருக்கும் இப்படம்  பிப்ரவரி 1-ம் தேதி வெளியாகவுள்ளது.  இப்படத்துக்கு  தணிக்கை குழு  'ஏ' சான்றிதழ் கொடுத்து அடல்ட் ஒன்லி திரைப்படமாக முத்திரைப்பதித்துள்ளது. 
 
கடந்த சில நாட்களுக்கு முன்பு இப்படத்தின் ட்ரெய்லர் வெளியான போது, அதிலிருந்த காட்சிகள், வசனங்கள் என அனைத்துமே முழுக்க ஆபாசமாகவும், இரட்டை அர்த்தம் கொண்ட  வசனமாக இருப்பதாகவும் நெட்டிசன்களும், தமிழ் சினிமா ஆர்வலர்களும் கடுமையாக விமர்சித்தனர். மேலும் மரண மட்ட பாடலின் வீடியோ வெளியானபோதும்  பெரும் சர்ச்சைக்குள்ளானது. அதுமட்டுமின்றி அண்மையில் வெளியான புரோமோ வீடியோவில் எனக்கு வாழைப்பழம் போதும் என முகம்சுளிக்கக்கூடிய வகையில்  ஓவியா பேசும் காட்சிகளும்  இடம்பெற்று சர்ச்சையை கிளப்பியது. 


 
இருப்பினும் மாஸ் நடிகர்களின் படங்களுக்கு இணையாக அதிகாலை 5 மணி காட்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள 90 எம் எல் படத்தின் 'பால்'  என்ற புதிய ஸ்னீக் பிக்  ஒன்று தற்போது வெளியாகி வைரலாகிவருகிறது.  
 
இந்த வீடியோவில் ஓவியாவின் தோழி ஒருவர் தன் கணவருடன் இருந்த முதலிரவு அனுபவத்தை ஒவ்வொன்றாக சொல்ல அதற்கு ஓவியாவும் அவரது மற்ற தோழிகளும் இடையிடையே கமெண்ட் அடித்து  இந்த படம் படு மோசமான அடல்ட் படம் என்பதை மீண்டும் ஒருமுறை காண்பித்துள்ளனர்.
 
இந்த வீடியோவுக்கு மோசமான கமெண்ட்ஸ் குவிந்துவருகிறது.