திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Prasanth Karthick
Last Modified: ஞாயிறு, 25 செப்டம்பர் 2022 (13:25 IST)

மகேஷ்பாபுவுடன் மோதும் மார்வெல் சூப்பர்ஹீரோ! – அதிகரிக்கும் எதிர்பார்ப்பு!

Mahesh Babu
தெலுங்கு இயக்குனர் ராஜமௌலி அடுத்து இயக்கும் படத்தில் க்ரிஸ் ஹெம்ஸ்வொர்த் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

தெலுங்கி இயக்குனரான ராஜமௌலி பாகுபலி, ஆர்.ஆர்.ஆர் உள்ளிட்ட பிரம்மாண்ட படங்களை எடுத்து புகழ்பெற்றவர். இவர் படங்கள் இந்தியாவில் மட்டுமல்லாமல் உலகம் முழுவதிலும் அதிகமான ரசிகர்களை ஈர்த்துள்ளது.

இந்நிலையில் அடுத்ததாக தெலுங்கு ஸ்டார் நடிகர் மகேஷ்பாபுவை வைத்து தனது அடுத்த படத்தை இயக்குகிறார் ராஜமௌலி. பொதுவாகவே வரலாற்று கால படங்கள் மீது ஆர்வம் கொண்ட ராஜமௌலி இந்த படத்தை எந்த காலகட்டம் சார்ந்து அமைக்கப்போகிறார் என்ற எதிர்பார்ப்பு உள்ளது.


இந்நிலையில் ராஜமௌலி – மகேஷ்பாபு இணையும் இந்த படத்தில் ஹாலிவுட் நடிகர் க்றிஸ் ஹெம்ஸ்வொர்த் நடிக்க உள்ளதாக வெளியாகியுள்ள தகவல் பெரும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. மார்வெல் சூப்பர்ஹீரோ படங்களில் தோர் என்னும் வைகிங் கடவுளாக நடித்து உலக புகழ் பெற்றவர் க்றிஸ் ஹெம்ஸ்வொர்த். சமீபத்தில் இவர் நடித்த தோர் லவ் அண்ட் தண்டர் வெளியாகி நல்ல வசூலை பெற்றது.

பிரபல ஹாலிவுட் நடிகரான கிறிஸ் ஹெம்ஸ்வொர்த் இந்தியா மீது தனிப்பிரியம் கொண்டவர். இந்நிலையில் அவர் இந்திய திரைப்படத்தில் நடிக்க உள்ளதாக வெளியாகியுள்ள தகவல் பலரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது.