ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: செவ்வாய், 24 நவம்பர் 2020 (11:15 IST)

ரஜினியின் கையில் இருக்கும் சிறுகுழந்தை… படத்தை வெளியிட்டு நெகிழ்ந்த ரஹ்மான்!

இசைப்புயல் ஏ ஆர் ரஹ்மான் தனது மகள் சிறுவயதாக இருக்கும் போது ரஜினியோடு எடுத்துக்கொண்ட புகைப்படத்தைப் பகிர்ந்துகொண்டுள்ளார்.

இசைத்துறையின் சூப்பர் ஸ்டாராக பல ஆண்டுகளாக தமிழ் சினிமாவில் கோலோச்சி வருகிறார் ரஹ்மான். கடந்த சில ஆண்டுகளாக சூப்பர் ஸ்டார் நடிகர்களின் படங்களுக்கு மட்டுமே இசையமைத்து வருகிறார். இந்நிலையில் இப்போது ரஜினியுடன் தான் மற்றும் தனது மகள் இருக்கும் புகைப்படம் ஒன்றை வெளியிட்டு நெகிழ்ச்சியாக பேசியுள்ளார்.

ரஜினி படையப்பா சமையத்தில் குழந்தையாக இருக்கும் கதிஜாவைக் கையில் வைத்திருக்கும் புகைப்படத்தை 21 ஆண்டுகளுக்குப் பிறகு வெளியிட்டுள்ளார்.