செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Modified: ஞாயிறு, 22 நவம்பர் 2020 (16:45 IST)

முடிந்தது தயாரிப்பாளர் சங்க தேர்தல்: யார் யார் ஓட்டு போட வரவில்லை?

முடிந்தது தயாரிப்பாளர் சங்க தேர்தல்: யார் யார் ஓட்டு போட வரவில்லை?
தயாரிப்பாளர் சங்கத் தேர்தல் இன்று காலை 8 மணி முதல் வாக்குப்பதிவு தொடங்கியது என்பதும் தயாரிப்பாளர்கள் பலரும் மிகுந்த ஆர்வத்துடன் வாக்களிக்க வந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது 
 
ஓய்வுபெற்ற நீதிபதி ஒருவரின் தலைமையில் நடந்த இந்த தேர்தலில் மொத்தம் 1304 வாக்குகல் இருந்தன. ஆனால் 4 மணியுடன் வாக்குப்பதிவு முடிந்தபோது 1050 பேர்கள் மட்டுமே வாக்களித்ததாக தகவல்கள் வெளிவந்துள்ளன
 
சற்று முன்னரும் தயாரிப்பாளர் சங்க தேர்தலில் வாக்குப்பதிவு முடிந்ததாகவும் இதனை அடுத்து வரும் திங்கட்கிழமை பதிவான வாக்குகள் எண்ணப்படும் என்றும் தகவல்கள் வெளிவந்துள்ளது 
மேலும் தயாரிப்பாளர் சங்க உறுப்பினர்கள் மொத்தம் 254 பேர் வாக்களிக்க வரவில்லை என்பதும் அவர்களில் ரஜினிகாந்த் தனுஷ் பாரதிராஜா ஏவிஎம் சரவணன் எஸ்பிபி சரண் ஆகியோர்களும் அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது