அமித்ஷா சந்திப்பை தவிர்க்கதான் ரஜினக்குக் காய்ச்சல் என்று தகவல் பரவியதா?

Last Modified ஞாயிறு, 22 நவம்பர் 2020 (15:57 IST)

தமிழகம் வந்துள்ள அமித்ஷா உடனான சந்திப்பைத் தவிர்ப்பதற்காகத்தான் ரஜினிக்கு காய்ச்சல் என்ற செய்தியை அவருக்கு சம்மந்தப்பட்டவர்களே பரப்பியதாக சொல்லப்படுகிறது.

தமிழகத்துக்கு நேற்று வருகை தந்த அமித்ஷா, ரஜினியை சந்திப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அந்த சந்திப்பு நேற்று நடைபெறவில்லை. மேலும் ரஜினியை பாஜக இனியும் அரசியலுக்கு வருமாறு வற்புறுத்த விரும்பவில்லை என்றும் அதனால்தான் நேற்று அதிமுகவுடன் கூட்டணியை உறுதி செய்தது என்றும் அரசியல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இந்த நிலையில் சற்று முன் திடீரென ரஜினிகாந்த்துக்கு காய்ச்சல் என்று சமூக வலைதளங்களில் மிக வேகமாக ஒரு வதந்தி பரவி வருகிறது. இதனால் ரஜினி ரசிகர்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர்.

ஆனால் ரஜினிக்கு காய்ச்சல் இல்லை என்றும் அது யாரோ விஷமிகள் பரப்பிய பொய்த்தகவல் என்றும் ரஜினியின் மக்கள் தொடர்பாளர் ரியாஸ் அகமது தெரிவித்துள்ளார். இந்நிலையில் மற்றொரு தரப்பினர் அமித்ஷா உடனான சந்திப்பை தவிர்ப்பதற்காகதான் ரஜினிக்குக் காய்ச்சல் என அவரது தரப்பினரே செய்தியை பரப்பியதாகவும் சொல்கின்றனர்.இதில் மேலும் படிக்கவும் :