ரஜினிக்கு காய்ச்சலா? பி.ஆர்.ஓ விளக்கம்

rajini
ரஜினிக்கு காய்ச்சலா? பி.ஆர்.ஓ விளக்கம்
siva| Last Modified ஞாயிறு, 22 நவம்பர் 2020 (12:33 IST)
தமிழகத்துக்கு நேற்று வருகை தந்த அமித்ஷா, ரஜினியை சந்திப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அந்த சந்திப்பு நேற்று நடைபெறவில்லை. மேலும் ரஜினியை பாஜக இனியும் அரசியலுக்கு வருமாறு வற்புறுத்த விரும்பவில்லை என்றும் அதனால்தான் நேற்று அதிமுகவுடன் கூட்டணியை உறுதி செய்தது என்றும் அரசியல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன
இந்த நிலையில் சற்று முன் திடீரென ரஜினிகாந்த்துக்கு காய்ச்சல் என்று சமூக வலைதளங்களில் மிக வேகமாக ஒரு வதந்தி பரவி வருகிறது. இதனால் ரஜினி ரசிகர்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர்.

இந்த நிலையில் தற்போது பிஆர்ஓ ரியாஸ் அவர்கள் இதுகுறித்து விளக்கம் அளித்துள்ளார். ரஜினிகாந்த்துக்கு காய்ச்சல் என்றும் தகவலில் சற்றும் உண்மை இல்லை என்றும் அவர் நலமுடன் இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இதனை அடுத்து ரஜினி ரசிகர்கள் நிம்மதி அடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது


இதில் மேலும் படிக்கவும் :