ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Mahendran
Last Modified: செவ்வாய், 7 நவம்பர் 2023 (17:10 IST)

ராகவா லாரன்ஸ் பட இயக்குநர் சாலை விபத்தில் காலமானார்! திரையுலகினர் இரங்கல்..!

நடிகர் மற்றும் இயக்குனர் ராகவா லாரன்ஸை கதாநாயகனாக அறிமுகப்படுத்திய இயக்குனர் சற்றுமுன் சாலை விபத்தில் காலமானார் என்ற தகவல் திரையுலகினர்களை வெறும் அதிர்ச்சியில் ஏற்படுத்தி உள்ளது.  
 
நடிகர் ராகவா லாரன்ஸ் ’அற்புதம்’ என்ற படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். இந்த படத்தின் இயக்குனர் அற்புதன். 52 வயதான இவர் சாலை விபத்தில் படுகாயம் அடைந்து சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார் 
 
இந்த நிலையில் சற்றுமுன் சிகிச்சையின் பலனின்றி இயக்குனர் அற்புதன் உயிர் இழந்து விட்டதாக தகவல் வெளியாகியுள்ளன.  அற்புதம் படம் மட்டுமின்றி ’மனதோடு மழைக்காலம்’ செப்பவே சிறுகாளி ஆகிய படங்களையும் இவர் இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.  
 
இந்த நிலையில் சாலை விபத்தில் மரணம் அடைந்த இயக்குனர் அற்புதன் மறைவுக்கு திரை உலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்
 
Edited by Mahendran