வியாழன், 23 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: வெள்ளி, 3 நவம்பர் 2023 (14:44 IST)

'தலைவர் 171- "சூப்பர் ஸ்டாருக்கு வில்லனாகும் ராகவா லாரன்ஸ்?

Raghava Lawrence
ரஜினிக்கு வில்லனாக ராகவா லாரன்ஸ் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகிறது.

நெல்சன் இயக்கத்தில் ஜெயிலர் பட வெற்றிக்குப் பின் ரஜினிகாந்த் தற்போது ரஜினி170 படத்தில் ஞானவேல் இயக்கத்தில் நடித்து வருகிறார்.

இப்படத்தை அடுத்து, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்க இருக்கும் ‘தலைவர் 171’ திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார். இந்த படத்துக்கு அனிருத் இசையமைக்க, அன்பறிவ் சண்டைக் காட்சிகளை இயக்கவுள்ளனர்.

பெரிய எதிர்பார்ப்புகள் ஏற்படுத்தியுள்ள  நிலையில்  ரஜினிகாந்தின் தீவிர ரசிகரரும் நடிகருமான ராகவா லாரன்ஸ் இப்படத்தில் ரஜினிக்கு வில்லனாக நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகிறது