சந்திரமுகி 2 சக்ஸஸ் ஆகணும்.. ரஜினி காலில் விழுந்து வணங்கிய ராகவா லாரன்ஸ்!
நடிகர் ராகவா லாரன்ஸ் நடித்துள்ள சந்திரமுகி-2 திரைப்படம் நாளை மறுநாள் வெளியாக உள்ள நிலையில் இன்று ரஜினிகாந்தை சந்தித்துள்ளார் லாரன்ஸ்.
வாசு இயக்கத்தில் ரஜினிகாந்த நடித்து ஹிட் ஆன படம் சந்திரமுகி. இந்த படத்தின் இரண்டாம் பாகத்தை தற்போது பி.வாசு இயக்கியுள்ளார். இந்த படத்தில் நடிகர் ராகவா லாரன்ஸ் நடித்துள்ளார். சந்திரமுகியாக கங்கனா ரனாவத் நடித்துள்ளார். இந்த படம் நாளை மறுநாள் (செப் 28) வெளியாக உள்ளது.
இந்நிலையில் இன்று நடிகர் ரஜினிகாந்தை நேரில் சந்தித்த ராகவா லாரன்ஸ் படம் வெற்றி பெற வேண்டும் என ரஜினியின் ஆசீர்வாதத்தை பெற்றுள்ளார். இதுகுறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அவர் “நண்பர்களுக்கும் ரசிகர்களுக்கும் வணக்கம் இன்று நான் என் தலைவரையும் குருவையும் சந்தித்தேன். ஜெயிலரின் பிளாக்பஸ்டர் வெற்றிக்காக அவரை வாழ்த்துவதற்காகவும், செப்டம்பர் 28 ஆம் தேதி சந்திரமுகி2 ரிலீஸுக்கு ஆசீர்வாதங்களைப் பெற்றதாகவும். நான் மிகவும் சந்தோஷமாக இருக்கிறேன். தலைவர் எப்போதும் பெரியவர். குருவே சரணம்” என கூறியுள்ளார்.
Edit by Prasanth.K