திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Updated : வெள்ளி, 29 செப்டம்பர் 2023 (20:54 IST)

‘சந்திரமுகி-2’ படக்குழுவினரை வாழ்த்திய சூப்பர் ஸ்டார்

Raghava Lawrence
நடிகர் ராகவா லாரன்ஸ் நடித்துள்ள ‘சந்திரமுகி-2’  படக்குழுவினருக்கு ரஜினிகாந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

தமிழ் சினிமாவின் பிரபல இயக்குனர் பி. வாசு. இவர்  இயக்கத்தில் ரஜினிகாந்த நடித்து ஹிட் ஆன படம் சந்திரமுகி. இந்த படத்தின் இரண்டாம் பாகத்தை தற்போது பி.வாசு இயக்கியுள்ளார். இந்த படத்தில் நடிகர் ராகவா லாரன்ஸ் நடித்துள்ளார். சந்திரமுகியாக கங்கனா ரனாவத் நடித்துள்ளார். இந்த படம் கடந்த 28 ஆம் தேதி ரிலீஸானது.

இப்படத்தின் ரஜினிகாந்த் வேடத்தில் ராகவா லாரன்ஸ் நடித்துள்ளார். இப்படக் குழுவினருக்கு ரஜினிகாந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர், ''மிகப்பெரிய பிரமாண்டமான தனது வெற்றிப்படமான சந்திரமுகியை புதிதாக வேறு ஒரு கோணடத்தில் பிரமாண்ட பொழுதுபோக்கு படமாக சினிமாவுக்கு தந்திருக்கும் பி.வாசுவுக்கும், ராகவா லாரன்ஸுக்கும் படக்குழுவினர் அனைவருக்கும் என் வாழ்த்துகள்'' என தெரிவித்துள்ளார்.