செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வெள்ளி, 10 ஜூலை 2020 (10:55 IST)

பிரபாஸ் நடிக்கும் அடுத்த படத்தின் டைட்டிலுடன் கூடிய ஃபர்ஸ்ட்லுக் ரிலீஸ்

பிரபாஸ் நடிக்கும் அடுத்த படத்தின் டைட்டிலுடன் கூடிய ஃபர்ஸ்ட்லுக் ரிலீஸ்
பிரபல தெலுங்கு நடிகர் பிரபாஸ் நடித்து வரும் ’பிரபாஸ் 20’ படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது. ஆனால் ஊரடங்கு காரணமாக கடந்த மார்ச் மாதத்தில் இருந்து இந்த படத்தின் படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது. இருப்பினும் இந்த படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருவதாக செய்திகள் வெளியாகி உள்ளது
 
இந்த நிலையில் சற்று முன்னர் ’பிரபாஸ் 20’ படத்தின் டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. இந்த படத்திற்கு ’ராதே ஷ்யாம்’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது
 
தமிழ் தெலுங்கு ஹிந்தி மற்றும் மலையாளம் ஆகிய நான்கு மொழிகளிலும் பர்ஸ்ட் லுக் போஸ்டரும் ஒரே நாளில் வெளிவந்து இணையதளத்தை கலக்கிக் கொண்டே இருக்கின்றது என்பது குறிப்பிடத்தக்கது. பிரபாஸ் ஜோடியாக பிரபல தெலுங்கு மற்றும் பாலிவுட் நடிகை பூஜா ஹெக்டே நடித்து வரும் இந்த படத்தில் மேலும் ஒரு ஹீரோயின் நடிக்க இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது
 
ராதா கிருஷ்ணகுமார் என்பவர் இயக்கும் இந்த திரைப்படம் மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த படம் வரும் 2021ஆம் ஆண்டு வெளியாகும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது