செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By sinoj
Last Modified: வியாழன், 11 ஜூன் 2020 (23:02 IST)

பிரபாஸ் பட இயக்குநருக்கு திருமண நிச்சயதார்த்தம் !

பிரபல நடிகர் பிரபாஸ் பாகுபலி படத்தை அடுத்து, சுஜித் என்ற இயக்குநருக்கு சாஹோ என்ற படத்தை இயக்கும் வாய்ப்பு அளித்தார். இப்படமும் அனைவரது கவனத்தையும் கவர்ந்தது.

இதனையத்து, சுஜித் அடுத்து மோகன் லால் நடிப்பில் வெற்றி பெற்ற லூசிபர் என்ற படத்தை தெலுங்கில் இயக்கவுள்ளார்.

இந்நிலையில் இவருக்கும் பிரவல்லிகா என்ற பெண்ணுக்கும் நேற்று எளிமையான முறையில் உறவினர்கள் முன்னிலையில் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. திருமணம் தேதி இனிமேல் தான் முடிவு செய்யப்படும் என தெரிவித்துள்ளார்.