திங்கள், 27 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : புதன், 8 ஜூலை 2020 (17:19 IST)

இதுதான் ‘துக்ளக் தர்பார்’ படத்தின் அட்டகாசமான ஃபர்ஸ்ட்லுக்!

மக்கள் செல்வன் விஜய்சேதுபதியின் அடுத்த திரைப்படமான 'துக்ளக் தர்பார்' என்ற திரைப்படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் இன்று அதாவது ஜூலை 8ஆம் தேதி மாலை 5 மணிக்கு வெளியாகும் என்று ஏற்கனவே நடிகர் விஜய்சேதுபதி தனது டுவிட்டரில் அறிவித்திருந்தார் என்ற செய்தியை பார்த்தோம்.
 
அதுமட்டுமின்றி இந்த படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் சன் டிவியின் சமூக வலைத்தள பக்கங்களில் வெளியாகும் என்றும் அவர் அறிவித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அவர் கூறியபடியே சரியாக இன்று மாலை 5 மணிக்கு சன் டிவியின் அதிகாரபூர்வ டுவிட்டர் பக்கத்தில் ‘துக்ளக் தர்பார்’ படத்தின் அட்டகாசமாக ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. விஜய்சேதுபதி ஒரு டேபிள் முன் அமைதியாக உட்கார்ந்திருக்க அவருடைய பிம்பம் சிரித்தபடி இருக்கும் வகையில் வித்தியாசமாக உள்ள இந்த போஸ்டர் தற்போது வைரலாகி வருகிறது
 
டெல்லிபிரசாத் தீனதயாள் என்பவர் இயக்கி வரும் இந்த படத்தில் விஜய்சேதுபதிக்கு ஜோடியாக அதிதிராவ் ஹைத்ரி நடித்து வருகிறார். மேலும் இந்த படத்தில் பார்த்திபன், மஞ்சிமா மோகன் உள்பட பலர் நடித்துள்ளனர். 7 ஸ்க்ரீன் ஸ்டுடியோஸ் மற்றும் வயாகாம் 18 ஸ்டுடியோஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரித்து வரும் இந்த படத்திற்கு கோவிந்த் வசந்தா இசையமைத்து வருகிறார்.