வெள்ளி, 28 மார்ச் 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: வெள்ளி, 28 மார்ச் 2025 (11:19 IST)

மிஷ்கின் மேல் எந்த கோபமும் இல்லை… நான் ஏன் அப்படி பேசினேன்?- பிரபல நடிகர் விளக்கம்!

தமிழ் சினிமாவில் பல முக்கியமானப் படங்களை எடுத்து பிரபலம் ஆனவர் இயக்குனர் மிஷ்கின். சில மாதங்களுக்கு முன்னர் நடந்த பாட்டல் ராதா படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் பேசும்போது படத்தைப் பற்றி பேசாமல் வேறு என்னென்னவோ பேசியும் சில இடக்கடக்கரலான வார்த்தைகளை வெளிப்படையாகப் பேசியும் முகம் சுளிக்க வைத்தார்.

மிஷ்கினின் அந்த பேச்சை நடிகர் அருள்தாஸ் கண்டித்து இன்னொரு மேடையில் பேசினார். அதில் “எவ்வளவோ உலக இலக்கியங்கள் மற்றும் உலக சினிமா பார்ப்பதாக மிஷ்கின் சொல்கிறார். ஆனால் ஒரு மேடை நாகரிகம் தெரியாதா? சில வார்த்தைகளை நாம் மேடையில் பேசக் கூடாது. வேறு எங்கு வேண்டுமானாலும் பேசிக் கொள்ளுங்கள். உங்களுக்கும் பெண் குழந்தை இருக்கிறது. நீ என்ன அவ்ளோ பெரிய அப்பாடக்கரா? உலக சினிமாவைப் பார்த்து காப்பியடிக்கும் போலி அறிவாளிதான் மிஷ்கின்” எனக் கண்டித்தார். அதன்பிறகு மிஷ்கின் தன் பேச்சுக்குக் கண்டனம் தெரிவித்தார்.

இந்நிலையில் தற்போது அளித்துள்ள ஒரு நேர்காணலில் அருள்தாஸ் தன் பேச்சுக்கு விளக்கம் அளித்துள்ளார். அதில் “எனக்கு மிஷ்கின் மேல் எந்த கோபமும் இல்லை. நானும் அவரும் இணைந்து ஜித்தன் படத்தில் பணியாற்றியுள்ளோம். இப்போது நாம் ஒரு வார்த்தைப் பேசினால் கூட அது உலகமெல்லாம் போய் சேர்கிறது. அப்படி இருக்கும் போது சினிமாக்காரர்களான நாம் பொறுப்புடன் பேசவேண்டும் என்பதால்தான் அப்படி பேசினேன். ஆனால் மிஷ்கின் தன் தவறை உணர்ந்து மன்னிப்புக் கேட்டதற்குத் தலை வணங்குகிறேன்” எனப் பேசியுள்ளார்.