ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: திங்கள், 8 பிப்ரவரி 2021 (11:17 IST)

மீண்டும் ஃபெப்சி தலைவரான ஆர் கே செல்வமணி – திரையுலகினர் வாழ்த்து!

இயக்குனர் செல்வமணி மீண்டும் திரைப்பட தொழிலாளர்கள் சங்கத்துக்கு தலைவராகியுள்ளார்.

தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனம் தமிழ் சினிமாவில் உள்ள 24 துறைகளையும் உள்ளடக்கிய சம்மேளமனமாக உள்ளது. இதற்கு 2 ஆண்டுக்கு ஒரு முறை தேர்தல் வைக்கப்பட்டு தலைவர் மற்றும் பொறுப்பாளர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். கடந்த இரண்டு முறையாக ஃபெப்சிக்கு தலைவராக ஆர் கே செல்வமணி தேர்வு செய்யப்பட்டு வந்தார்.

இந்நிலையில் அவரின் பதவிக் காலம் முடிந்த நிலையில் மீண்டும் அவரே போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதற்கு பாரதிராஜா உள்ளிட்ட மூத்தக் கலைஞர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.