வியாழன், 16 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: சனி, 29 ஆகஸ்ட் 2020 (16:29 IST)

படங்களை ஒடிடி, டிஜிட்டல், தியேட்டர் உள்ளிட்ட அனைத்திலும் வெளியிட வேண்டும் - ஆர்.கே.செல்வமணி

படப்பிடிப்புகளுக்கு அனுமதி அளிக்க வேண்டுமென  தென்னிந்திய திரைப்படத் தொழிலாளர்கள் சம்மேளனத்தின் தலைவர் ஆர்.கே.செல்வமணி தெரிவித்துள்ளார்.

கொரோனா காலத்தில் தியேட்டர் திறக்கத் தாமதம் ஆகிவருவதால் பொன்மகள் வந்தாள், லாக்கப் உள்ளிட்ட படங்கள் ஒட்டி தளத்தில் வெளியானது. சூரரைப்போற்று படம் அக்டோபர் 30 ஆம்தேதி வெளியாகவுள்ளது. இதற்கு தியேட்டர் அதிபர்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து ஆர்.கே.செல்வமணி கூறியுள்ளதாவது : படங்களில் திரையரங்குகளில் தான் பார்க்க வேண்டும் என்பது இல்லை. ஒடிடி, டிஜிட்டல், தியேட்டர் உள்ளிட்ட அனைத்திலும் வெளியிட வேண்டுமென தன் கருத்தைத் தெரிவித்துள்ளார்.