1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: செவ்வாய், 26 மே 2020 (09:03 IST)

சினிமா படப்பிடிப்பு ஜூன் மாதத்தில் நடக்க வாய்ப்பில்லை- ஆர் கே செல்வமணி தகவல்!

தமிழ் சினிமா படப்பிடிப்புகள் நிறுத்தப்பட்டு இரண்டு மாதங்கள் ஆகியுள்ள நிலையில் மீண்டும் எப்போது தொடங்கும் என்று ஃபெப்சி அமைப்பின் தலைவர் ஆர் கே செல்வமணி தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் பரவல் அச்சம் காரணமாக தமிழகத்தில் சினிம படப்பிடிப்புகள் மார்ச் மாதம் 19 ஆம் தேதி முதல் நிறுத்தப்பட்டன. கிட்டத்தட்ட 2 மாதங்களாக படப்பிடிப்புகள் நடக்காததால் தொழிலாளர்கள் முதல் தயாரிப்பாளர்கள் வரை அனைவருமே பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் சில தினங்களுக்கு முன்னதாக சின்னத்திரை தொடர்களுக்கான படப்பிடிப்பு நடத்திக் கொள்ள தமிழக அரசு சில நிபந்தனைகளோடு அனுமதி அளித்திருந்தது.

இது சம்மந்தமாக திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளன தலைவர் ஆர் கே செல்வமணி செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது ‘ அரசு விதித்துள்ள நிபந்தனைகளில் சிலவற்றை மாற்ற சொல்லிக் கேட்டுள்ளோம். குறிப்பாக 20 பேரை வைத்துக்கொண்டு படப்பிடிப்பு நடத்த முடியாது. அதனால் 40 பேருக்கு அனுமதி அளிக்கவேண்டும் எனக் கூறியுள்ளோம். பேச்சுவார்த்தை முடிந்த பின்னர் விரைவில் படப்பிடிப்புகள் தொடங்கும். சினிமா படப்பிடிப்புகளில் இன்னும் அதிகமான பேர் இருப்பார்கள் என்பதால் ஜூன் மாதம் வரை படப்பிடிப்பு நடத்துவதற்கான சாத்தியம் இல்லை. சின்னத்திரை படப்பிடிப்புகள் நடந்து அதன் முடிவுகளை வைத்தே சினிமாவுக்கு அனுமதி கேட்கமுடியும்’ எனக் கூறியுள்ளார்.