1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Modified: ஞாயிறு, 7 பிப்ரவரி 2021 (12:51 IST)

பெப்சி தலைவராக ஆர்.கே.செல்வமணி மீண்டும் தேர்வு!

தென்னிந்திய திரைப்பட சம்மேளனம் என்று கூறப்படும் பெப்சியின் தலைவராக மீண்டும் ஆர்கே செல்வமணி தேர்வு செய்யப்பட்டுள்ளார்,.
 
தென்னிந்திய திரைப்பட தொழிலாளர் சம்மேளனத்தின் தேர்தல் விரைவில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில் இந்த தேர்தலில் தலைவர் பதவிக்கு மீண்டும் போட்டியிடப்போவதாக ஆர்கே செல்வமணி சமீபத்தில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார் என்பதை பார்த்தோம்.
 
இந்த நிலையில் சற்று முன் தென்னிந்திய திரைப்பட தொழிலாளர் சம்மேளனத்தின் தலைவராக ஆர்கே செல்வமணி மீண்டும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.
 
மேலும் தென்னிந்திய திரைப்பட தொழிலாளர் சம்மேளனத்தின் பொதுச் செயலாளராக அங்கமுத்து சண்முகம் என்பவரும் பொருளாளராக சுவாமிநாதன் என்பவரும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இதனை அடுத்து தென்னிந்திய திரைப்பட தொழிலாளர் சம்மேளனத்தின் பொறுப்பாளர்களாக தேர்வு செய்யப்பட்ட அனைவருக்கும் திரையுலகினர் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்