செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: திங்கள், 13 டிசம்பர் 2021 (11:13 IST)

ரிலிஸுக்கு முன்பே 250 கோடி ரூபாய் பிஸ்னஸ் செய்த புஷ்பா!

பிரபல தெலுங்கு நடிகர் அர்ஜூன் அலா வைகுந்தபுரம்லூ படத்தின் வெற்றிக்குப் பின்னர் நடிக்கும் ’புஷ்பா’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை மசாலா இயக்குனர் சுகுமார் இயக்கி வருகிறார். ஆந்திராவில் நடக்கும் செம்மரக் கடத்தல் பற்றியக் கதை என சொல்லப்பட்டதால் மிகவும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. கொரோனா முதல் அலையின் போது  காரணமாக படப்பிடிப்பு 6 மாதங்களுக்கு மேல் தடைபட்டது. இந்த படத்தில் மலையாள நடிகரான பஹத் பாசில் நடிக்கிறார்.

இரண்டு பாகங்களாக உருவாகும் படத்தின் முதல் பாகம் படப்பிடிப்பு முழுவதும் முடிந்துவிட்டது. இந்நிலையில் முதல் பாகத்தின் ரிலீஸ் தேதி இப்போது அறிவிக்கப்பட்டுள்ளது. டிசம்பர் மாதம் 17 ஆம் தேதி கிறிஸ்துமஸ் பண்டிகை விடுமுறையின் போது ரிலிஸாக உள்ளது. பேன் இந்தியா படமாக உருவாகும் இந்த திரைப்படத்தின் அந்தந்த மொழி விநியோக உரிமையை முன்னணி நிறுவனங்கள் கைப்பற்றியுள்ளன.

இந்நிலையில் புஷ்பா திரைப்படம் ரிலிஸுக்கு முன்பாகவே 250 கோடி ரூபாய் அளவுக்கு வியாபாரம் செய்யப்பட்டுள்ளதாம். அல்லு அர்ஜுன் நடிப்பில் மிக அதிக தொகைக்கு விற்பனையான திரைப்படமாக புஷ்பா அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.