ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Updated : செவ்வாய், 2 ஏப்ரல் 2024 (23:05 IST)

விஜயின் 'தி கோட் 'படத்துடன் மோதும் 'புஷ்பா -2' ?

GOAT
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் விஜய். இவர் தற்போது வெங்கட்பிரபு இயக்கத்தில் தி கோட் என்ற படத்தில் நடித்து வருகிறார்.
 
இப்படத்தில் விஜயுடன் இணைந்து, பிரசாந்த், பிரபுதேவா, சினேகா, லைகா உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர்.
 
பிரமாண்டமாக தயாராகி வரும் இப்படத்திற்கு யுவன் இசையமைக்க, ஏஜிஎஸ் தயாரிக்கிறது.
 
தற்போது கேரளாவில் ஷுட்டிங் நடந்து வரும் நிலையில், வரும் தி கோட் படக்குழு இப்படத்தின் இறுதிக்கட்ட ஷூட்டிங் ரஷ்யாவில் நடக்கவுள்ளது.
 
ஏற்கனவே ரஷ்யாவுக்குச் சென்று கிளைமாக்ஸ் நடக்கவுள்ள இடத்தை அர்ச்சனா கல்பாத்தி பார்த்துவிட்டு வந்ததாக கூறப்படும் நிலையில், இனிமேல், இப்படக்குழுவினர் அங்கு என்று இடத்தைப் பார்த்துவிட்டு சென்னை திரும்பிய பின், மொத்த படக்குழுவும் ரஷ்யாவுக்குச்  செல்லவுள்ளதாக கூறப்படுகிறது. 
 
இப்படத்தின் முதல் சிங்கில் வரும் ஏப்ரல் 14 ஆம் தேதி தமிழ்ப் புத்தாண்டு தினத்தன்று வெளியாகும் என தகவல் வெளியாகிறது.
 
இப்படத்தின் ரிலீஸ் வரும் ஆகஸ்ட் மாதம் என தகவல் வெளியானது. 
 
ஆனால் எந்த தேதியில் இப்படம் ரிலீஸாகும் என குறிப்பிடவில்லை. இந்த நிலையில்,அல்லு அர்ஜூனின் ’புஷ்பா 2 ’படம் விஜய்யின் ’தி கோட் ’படத்துடன் மோதுகிறதா? என கேள்வி எழுந்தது.  

ஆனால், அல்லு அர்ஜுன் ராஷ்மிகா நடிப்பில் உருவாகியுள்ள புஷ்பா 2 படம் வரும் ஆகஸ்ட் மாதம்  15 ஆம் தேதி சுதந்திர தினத்தையொட்டி ரிலீஸாகவுள்ளது.
 
இது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்ட நிலையில், விஜய்யின் தி கோட் படம் இன்னும் தேதியை இன்னும் உறுதி செய்யவில்லை. இதனால், புஷ்பா 2 படம் ரிலீஸுக்கு சில நாள்களுக்கு முன்பு அல்லது பின்னர் வெளியாக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
 
இதற்கு முன்பு தி கோட் படத்தின் சிங்கில், டீசர், டிரெயிலர் உள்ளிட்டவைகள் அடுத்தடுத்து வெளியாகவுள்ளதால் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.