1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Updated : ஞாயிறு, 31 மார்ச் 2024 (01:13 IST)

தி கோட்: வெங்கட்பிரபுவின் வார்த்தை பலிக்குமா?

GOAT
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் விஜய். இவர் தற்போது வெங்கட்பிரபு இயக்கத்தில் தி கோட் என்ற படத்தில் நடித்து வருகிறார்.
 
இப்படத்தில் விஜயுடன் இணைந்து, பிரசாந்த், பிரபுதேவா, சினேகா, லைகா உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர்.
 
பிரமாண்டமாக தயாராகி வரும் இப்படத்திற்கு யுவன் இசையமைக்க, ஏஜிஎஸ் தயாரிக்கிறது.
 
தற்போது கேரளாவில் ஷுட்டிங் நடந்து வரும் நிலையில், வரும் தி கோட் படக்குழு இப்படத்தின் இறுதிக்கட்ட ஷூட்டிங் ரஷ்யாவில் நடக்கவுள்ளது.
 
ஏற்கனவே ரஷ்யாவுக்குச் சென்று கிளைமாக்ஸ் நடக்கவுள்ள இடத்தை அர்ச்சனா கல்பாத்தி பார்த்துவிட்டு வந்ததாக கூறப்படும் நிலையில், இனிமேல், இப்படக்குழுவினர் அங்கு என்று இடத்தைப் பார்த்துவிட்டு சென்னை திரும்பிய பின், மொத்த படக்குழுவும் ரஷ்யாவுக்குச்  செல்லவுள்ளதாக கூறப்படுகிறது.

மேலும், இயக்குனர் வெங்கட்பிரபு கூறியது போல் விரைவில் தி கோட் பட அப்டேட் ரசிகர்களை திருப்திப் படுத்தும் வகையில் வெளியாகும் என தெரிகிறது. அதன்படி,  யுவனின் இசையில், விஜய் பாடிய பாடலே முதல் சிங்கிலாக வெளியாகும என எதிர்பார்க்கப்படுகிறது.