ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Updated : செவ்வாய், 2 ஏப்ரல் 2024 (22:58 IST)

தி கோட் பட ஃபர்ஸ்ட் சிங்கில், டீசர் அப்டேட்?

நடிகர் விஜய். இவர் தற்போது வெங்கட்பிரபு இயக்கத்தில் தி கோட் என்ற படத்தில் நடித்து வருகிறார்.
 
இப்படத்தில் விஜயுடன் இணைந்து, பிரசாந்த், பிரபுதேவா, சினேகா, லைகா உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர்.
 
பிரமாண்டமாக தயாராகி வரும் இப்படத்திற்கு யுவன் இசையமைக்க, ஏஜிஎஸ் தயாரிக்கிறது.
 
தற்போது கேரளாவில் ஷுட்டிங் நடந்து வரும் நிலையில், வரும் தி கோட் படக்குழு இப்படத்தின் இறுதிக்கட்ட ஷூட்டிங் ரஷ்யாவில் நடக்கவுள்ளது.
 
ஏற்கனவே ரஷ்யாவுக்குச் சென்று கிளைமாக்ஸ் நடக்கவுள்ள இடத்தை அர்ச்சனா கல்பாத்தி பார்த்துவிட்டு வந்ததாக கூறப்படும் நிலையில், இனிமேல், இப்படக்குழுவினர் அங்கு என்று இடத்தைப் பார்த்துவிட்டு சென்னை திரும்பிய பின், மொத்த படக்குழுவும் ரஷ்யாவுக்குச்  செல்லவுள்ளதாக கூறப்படுகிறது. 
 
இப்படத்தின் முதல் சிங்கில் வரும் ஏப்ரல் 14 ஆம் தேதி தமிழ்ப் புத்தாண்டு தினத்தன்று வெளியாகும் என தகவல் வெளியாகிறது.
 
இதற்காக படக்குழு திட்டமிட்டுள்ளதாகவும், சமீபத்தில் வெங்கட்பிரபு சூப்பர் அப்டேட் வரும் என கூறியது இதற்காகத்தான் என தெரிகிறது.
 
மேலும், மங்காத்தா படத்தில் இருந்த மாதிரி தி கோட் படத்திலும் தீம் இருக்கிறது எனவும், இப்படத்தில் மொத்த 4 பாடல்கள் இருப்பதால், இந்த முதல் சிங்கில் வெளியாகி, அடுத்த 2  மாதங்களுக்கு தாங்கும் எனக் கூறப்படுகிறது.
 
மேலும், விஜயின் பிறந்த நாளில் தி கோட் பட டீசர் வெளியாகும் எனவும் இப்படம் வரும் ஆகஸ்ட் மாதம் சுதந்திர தினத்தையொட்டி  வெளியாகும் என கூறப்படுகிறது.
 
இதனால் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்