திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: புதன், 27 மார்ச் 2024 (22:14 IST)

ரஷ்யாவில் ஷூட்டிங்- தேர்தலில் விஜய் ஓட்டுப்போடுவாரா?

'தி கோட் 'படக்குழு வரும்  ஏப்ரலில்  ரஷ்யாவுக்கு செல்லவுள்ள நிலையில், 
மக்களவை தேர்தலில் விஜய் ஓட்டுப்போடுவாரா? எனக் கேள்வி எழுந்துள்ளது. 
 
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரும் தமிழக முன்னேற்ற கழகத் தலைவருமான விஜய் தற்போது தி கோட் படத்தில் நடித்து வருகிறார்.
 
இப்படத்தில் அவருடன் இணைந்து பிரசாந்த், பிரபுதேவா உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர். இப்படத்திற்கு யுவன் சங்கர்ராஜா இசையமைக்க, இப்படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் பிரமாண்டமாக தயாரிக்கிறது.
 
இப்படத்தில் ஷூட்டிங் தற்போது கேரளாவில் நடந்து வருகிறது. விஜய்,பிரபுதேவா உள்ளிட்ட நடிகர்களின் காட்சிகள் படமாக்கப்பட்டு வருகிறது.
 
இப்படத்தின் ஷூட்டிங் கேரளாவில் நடந்து வரும் நிலையில், அங்கு ஷூட்டிங் முடிந்த பின்பு, ரஷ்யாவில் ஒரு ஷெட்யூல் பாக்கியுள்ளதால் ரஷ்யாவுக்கு படக்குழு செல்லவுள்ளது.
 
இந்த நிலையில், ஏப்ரல் முதல் வாரத்தில் தி கோட் படக்குழு ரஷ்யா நாடு செல்லவுள்ளது. அங்கு 16 நாட்கள் தொடர்ச்சியாக ஷூட்டிங் நடைபெறவுள்ளது. அங்கு அனைத்துக் காட்சிகளும் முடித்த பின்புதான் படக்குழு மீண்டும் சென்னை திரும்பும் என தகவல் வெளியாகிறது.
 
ஆனால், மக்களவை தேர்தல் வரும் ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் நடைபெறவுள்ள நிலையில், விஜய் ஓட்டுப்போடுவாரா? எனக் கேள்வி எழுந்துள்ளது. 
 
அதேசமயம், தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியின் தலைவராகவும் அடுத்த சட்டமன்ற தேர்தலுக்கு தயாராகி  உறுப்பினர்களை கட்சியில் சேர்த்துவரும் விஜய், நிச்சயம் ஓட்டுப்போட வருவார் என கூறப்படுகிறது. 
 
ஒருவேளை கேரளாவில் இருந்து ரஷ்யா சென்றாலும் கூட விஜய் ஓட்டுப்போடுவதற்காக சென்னை வந்துவிட்டு மீண்டும் ரஷ்யாவுக்கு செல்ல வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.