செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: சனி, 9 செப்டம்பர் 2023 (07:34 IST)

சந்திரமுகி 2 தள்ளிவைப்பு… லைகாவின் செயலால் கோபமான பிரபல தயாரிப்பாளர்!

ராகவா லாரன்ஸ் நடித்த சந்திரமுகி 2 திரைப்படம் வரும் செப்டம்பர் 15ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது கிராபிக்ஸ் காட்சிகளின் பணிகள் முடிவடையாததால் படத்தின் ரிலீஸ் தேதி செப்டம்பர் 28 ஆம் தேதி என்று மாற்றப்பட்டுள்ளது.

இதனால் செப்டம்பர் 28 ஆம் தேதி ரிலீஸ் ஆக இருந்த படங்களுக்கு திரையரங்குகள் கிடைப்பதில் சிக்கல் எழுந்துள்ளது. இந்நிலையில் செப்டம்பர் 28 ஆம் தேதி ரிலீஸ் ஆக உள்ள ரத்தம் படத்தின் தயாரிப்பாளர் தனஞ்செயன் லைகாவின் இந்த திடீர் அறிவிப்பை அடுத்து கோபமாக எதிர்வினையாற்றியுள்ளார்.

X தளத்தில் அவர் பதிவில் “தமிழ் சினிமாவின் மற்றொரு வலிமிகுந்த விஷயம், பெரிய படங்களின் நிறுவனங்கள் அவர்கள் இஷ்டத்துக்கு ரிலீஸ் தேதியை மாற்றுவது. அந்த தேதியில் ரிலீஸ் ஆகவுள்ள படங்களை பற்றி சிறிது கூட யோசிப்பதில்லை. செப்டம்பர் 28 ஆம் தேதி ரிலீஸ் ஆகும் ஐந்துக்கும் மேற்பட்ட படங்களை ரசிகர்கள் எப்படி பார்க்க முடியும். பெரிய படங்களின் ரிலீஸ் தேதிகளை அறிவிப்பதன் ஒழுக்கம் எங்கே” எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.