வியாழன், 9 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வெள்ளி, 8 செப்டம்பர் 2023 (07:00 IST)

கங்கனாவுக்காகவே சந்திரமுகி 2 படத்தைப் பார்ப்பேன்.. ஜோதிகா பாராட்டு!

2005 ஆம் ஆண்டு வெளியான சந்திரமுகி திரைப்படத்தின் இரண்டாம் பாகம் தற்போது உருவாக்கத்தில் உள்ளது.லாரன்ஸ், வடிவேலு, ராதிகா சரத்குமார் மற்றும் கங்கனா ரனாவத் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர். படத்தில் சந்திரமுகியாக நடிக்க பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் ஒப்பந்தம் ஆகியுள்ளார்.

படம் செப்டம்பர் 15 ஆம் தேதி விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு ரிலீஸ் ஆகவுள்ளது. இப்போது படத்தின் ப்ரமோஷன் நிகழ்ச்சிகளில் படக்குழுவினர் கலந்துகொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் படத்தில் சந்திரமுகியாக நடித்துள்ள கங்கனாவின் நடிப்பைப் பாராட்டி பேசியுள்ள ஜோதிகா “இந்தியாவின் திறமையான நடிகைகளில் ஒருவரான கங்கனா சந்திரமுகி வேடத்தில் நடித்திருப்பது பெருமையான விஷயம். சந்திரமுகி தோற்றத்தில் அவர் சிறப்பாக பொருந்தியுள்ளார். அவருக்காகவே நான் இந்த படத்தைப் பார்ப்பேன்” எனக் கூறியுள்ளார்.