1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Updated : வெள்ளி, 8 செப்டம்பர் 2023 (20:55 IST)

’’சந்திரமுகி- 2’’படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு

CHANDRAMUKI-2
ராகவா லாரன்ஸ், கங்கனா ரனாவத் நடிப்பில்  பி.வாசு இயக்கத்தில்  எம்எம் கீரவாணி இசையில் உருவான திரைப்படம் சந்திரமுகி 2. இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்து செப்டம்பர் 15ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டது. 

இந்த நிலையில், இப்படத்தின் கிராபிக்ஸ் காட்சிகளின் பணிகள் முடிவடையாததால் இந்த படத்தின் ரிலீஸ் தேதி தள்ளி போகவுள்ளதாக தகவல் வெளியானது.

இந்த நிலையில்,இதுபற்றி லைகா நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அதில், தொழில் நுட்ப தாமதம் காரணமாக சந்திரமுகி 2 படம் வரும் செப்டம்பர் 28 ஆம் தேதி ரிலீஸாகும் என்று லைகா நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் பிரமாண்டமாக நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
 

இப்படத்திற்குப் போட்டியாக ரிலிஸாக இருந்த  மார்க் ஆண்டனி படத்தை வெளியிட ஐகோர்ட் தடை விதித்துள்ளது.
 
அதாவது, பிரபல லைகா நிறுவனத்திற்கு விஷால்  தர வேண்டிய ரூ.21.29 கோடியில் ரூ.15 கோடியை  நீதிமன்றத்திற்குச் செலுத்த வேண்டுமென உத்தரவிடப்பட்டிருந்த நிலையில்,  நடிகர் விஷால் இதுவரை செலுத்தாத காரணத்தால் அவரது மார்க் ஆண்டனி படத்தை வெளியிட சென்னை நீதிமன்றம் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.