ப்ரியா ப்ரகாஷ் வாரியர் கொடுத்த முத்தம்? – வைரலான வீடியோ

priya praksh varrier
Last Modified செவ்வாய், 23 ஜூலை 2019 (20:15 IST)
ஒரு அடார் லவ் என்ற மலையாள படத்தில் நடித்ததன் மூலம் இந்திய அளவில் புகழ்பெற்றவர் மலையாளநடிகை ப்ரியா ப்ரகாஷ் வாரியர்.

அந்த படத்தில் அவர் ஒரு பாடலில் கண்ணடிக்கும் காட்சி இணையத்தில் வைரலாகியது. பலர் அதுபோலவே டிக்டாக் வீடியோக்கள் செய்து வெளியிட்ட சம்பவங்களும் நடந்தது.

ஒரு அடார் லவ் மூலம் பிரபலமான ப்ரியா ப்ரகாஷ் வாரியர் தற்போது தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் சில படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் ப்ரியா தனது இன்ஸ்டாக்ராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில் ப்ரியாவும், அடார் லவ் ஸ்டோரியின் ஒளிப்பதிவாளர் சினு சித்தார்த்தும் அமர்த்திருக்கின்றனர். சினு முத்தம் கொடுப்பது போல ப்ரியாவின் அருகில் சென்று அப்படியே மாற்றி கையில் உள்ள தண்ணீர் பாட்டிலில் இருந்து தண்ணீரை குடிக்கிறார்.

இந்த வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. பலமான எதிர்பார்ப்போடு பார்த்தவர்களுக்கு கடைசியாக பல்பு கொடுப்பது போல் அமைந்த இந்த வீடியோவை ரசிகர்கள் பலரும் லைக் செய்து ஷேர் செய்து வருகின்றனர்.இதில் மேலும் படிக்கவும் :