புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : செவ்வாய், 23 ஜூலை 2019 (18:43 IST)

"பிக்பாஸ் வீட்டில் அட்லீ"..! ஆதங்கத்தை கொட்டிய பிரபல இயக்குனர்!

பிக்பாஸ் நிகழ்ச்சி தமிழில் அமோக வரவேற்பை பெற்று தொலைக்காட்சியின் டிஆர்பி அதிகரித்து வருகிறது. 


 
இந்த சீசனில் கவின் அதிகமாக பரீட்சியமாகிவிட்டார், தற்போது வரை இந்த வீட்டில் இருந்து பாத்திமா பாபு, வனிதா மோகன் வைத்யா என இதுவரை மூன்று பேர் வெளியே சென்று விட்டனர். எனவே அடுத்ததாக வைல்டு கார்டு மூலமாக யார் உள்ளே வருவார்கள் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளது.    
 
அந்த வகையில் தற்போது பிரபல கனா பட  இயக்குனரான அருண் காமராஜ் பிக்பாஸ் குறித்து தனது கருத்தை தெரிவித்துள்ளார். அதாவது, கவினுக்காக தான் நான் பிக்பாஸ் நிகழ்ச்சி பார்க்கிறேன் என்று கூறிய அவர்,  இயக்குனர் அட்லீ பிக்பாஸ் வீட்டிற்குள் சென்றால் நன்றாக இருக்கும் என்று தன் விருப்பத்தை தெரிவித்துள்ளார்.