என் படங்களை என்னையே ட்ரோல் பண்ண வைத்துவிட்டார்கள்.. சந்தானத்தின் ‘டிடி நெக்ஸ்ட் லெவல்’ குறித்து கௌதம் மேனன்!
சந்தானம் நடிப்பில் வெளியான தில்லுக்கு துட்டு 1 மற்றும் தில்லுக்கு துட்டு 2 ஆகிய இரண்டு படங்களும் அவருக்கு வெற்றியை ஈட்டித்தந்த படங்களாக அமைந்தன. அந்த வரிசையில் 2023 ஆம் ஆண்டு அந்த படத்தின் மூன்றாவது பாகத்தை டிடி ரிட்டர்ன்ஸ் என்ற பெயரில் எடுக்க அதுவும் ஹிட் படமானது.
இந்த படம் திரையரங்கின் மூலமாக மொத்தம் 30 கோடி ரூபாய் அளவுக்கு வசூலித்து கேரியர் பெஸ்ட் வசூலை கொடுத்தது. ஓடிடியிலும் அதிகளவில் பார்வையாளர்களால் பார்க்கப்பட்டது. இதையடுத்து அந்த படத்தின் நான்காம பாகமாக “டிடி நெக்ஸ்ட் லெவல் படம் உருவாகி வருகிறது. இந்த படத்தை ஆர்யா தயாரிக்க டிடி ரிட்டர்ன்ஸ் படத்தை இயக்கிய பிரேம் ஆனந்த் இயக்குகின்றனர். கௌதம் மேனன் மற்றும் செல்வராகவன் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்க இந்த படம் மே 1 ஆம் தேதி ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டு இன்று முதல் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் இந்த படம் பற்றி பேசியுள்ள இயக்குனர் கௌதம் மேனன் “இந்த படத்தில் என்னுடைய முந்தைய படங்களை என்னை வைத்தே ட்ரோல் செய்துவிட்டார்கள். சந்தானத்துக்காக மட்டும்தான் இந்த படத்தில் நான் நடித்தேன். ஆனால் மிகவும் ரசித்துதான் இந்த படத்தில் நடித்தேன்” எனக் கூறியுள்ளார்.