திங்கள், 27 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : செவ்வாய், 23 ஜூலை 2019 (16:46 IST)

தெலுங்கு பிக்பாஸ் வீட்டில் நுழைந்த பிரபல தமிழ் இயக்குனர் - யாருன்னு பாருங்க!

முதன் முதலாக  இந்தியில் ஆரம்பிக்கப்பட்ட பிக்பாஸ் நிகழ்ச்சி பின்னர் தமிழ், தெலுங்கு , மராத்தி, கன்னடா என பல மொழிகளில் ஒளிபரப்பப்பட்டு இந்தியா முழுக்க பரவி வருகிறது. 


 
அந்தவகையில் தற்போது தெலுங்கு பிக்பாஸ் நிகழ்ச்சியை பிரபல நடிகரான நாகார்ஜூனா தொகுத்து வழங்குகிறார். அந்நிகழ்ச்சியில் பிரபல தமிழ் இயக்குனரான  பாபா பாஸ்கர் கலந்து கொள்ளவிருக்கிறாராம். இவர்  தற்போது சூர்யாவின் காப்பான்  படத்தின் "சிரிக்கி சீனிக்கட்டி சினிங்கி சிங்காரி" என்ற பாடலுக்கு நடனம் அமைத்திருக்கிறார். 
 
தமிழ் , தெலுங்கு சினிமாக்களில்  முன்னணி நடன இயக்குநராக இருக்கும் இவர் ஜி.வி.பிரகாஷ், பார்த்திபன் ஆகியோர் நடிப்பில் வெளியான குப்பத்து ராஜா படத்தை இயக்கியிருந்தார். இந்நிலையில் தற்போது இவர் தெலுங்கு பிக்பாஸ் நிகழ்ச்சியில்  பங்கேற்றுள்ளதாக காப்பான் பட இயக்குனரான கே.வி ஆனந்த் தெரிவித்துள்ளார்.  அதனால் தான் அவரால் காப்பான் இசை வெளியீட்டு விழாவில் பங்கேற்கமுடியவில்லை எனவும் கூறினார்.