தொடர்புடைய செய்திகள்
- அடுத்தடுத்து அதிரிபுதிரி ஹிட்.. சிரஞ்சீவி படத்தை இயக்கும் வாய்ப்பை பெற்ற இளம் இயக்குனர்!
- மலேசியாவில் சென்சார் செய்யப்பட்ட விடாமுயற்சி… குழந்தைகள் பார்க்க முடியாதா?
- விடாமுயற்சி படம் வந்தால் ரெஜினாவுக்குதான் அதிக பாராட்டு கிடைக்கும்.. அஜித் சொன்ன வார்த்தை!
- ரேஸ்ல எனக்கு என்ன வேணாலும் ஆகலாம்..! - மகிழ்திருமேனியிடம் AK சொன்ன அந்த வார்த்தை!
- வெளிநாடுகளில் ஒரு நாள் முன்னதாகவே ரிலீஸ் ஆகும் விடாமுயற்சி!
சிவா, ஹெச் வினோத் வரிசையில் இணையும் மகிழ் திருமேனி… அஜித் கொடுத்த வாக்குறுதி!
அஜித் நடிப்பில் மகிழ் திருமேனி இயக்கத்தில் லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் உருவாகி வரும் திரைப்படம் விடாமுயற்சி. படத்தில் அஜித்தோடு, அர்ஜுன், ஆர்வ, த்ரிஷா, ரெஜினா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஓம் பிரகாஷ் ஒளிப்பதிவாளராகப் பணியாற்ற அனிருத் இசையமைக்கிறார். மிலன் கலை இயக்குனராகப் பணியாற்றியுள்ளார்.
இந்த படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதனால் இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு அஜித்தைத் திரையில் பார்க்கும் ஆர்வத்தில் அவரது ரசிகர்கள் உற்சாகத்தில் இருந்தன. ஆனால் திடீரென்று லைகா நிறுவனம் படம் பொங்கலுக்கு ரிலீஸாகாது என அறிவித்தது. இதையடுத்து அந்த படத்தின் மீதிருந்த சிக்கல்கள் எல்லாம் தீர்க்கப்பட்டு தற்போது பிப்ரவரி 6 ஆம் தேதி படம் ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இப்போது படத்தின் ப்ரமோஷனுக்காக இயக்குனர் மகிழ் திருமேனி அடுத்தடுத்து நேர்காணல்களைக் கொடுத்து வருகிறார். அதில் ஒரு நேர்காணலில் பேசும்போது “அஜித் சார் என்னிடம் ஒருநாள் “மகிழ் நாம் தொடர்ந்து படங்கள் பண்னுவோம். இதையேதான் நான் சிவாவிடம் ஹெச் வினோத்திடமும் கூறினேன்.” எனக் கூறினார். அதனால் எங்கள் கூட்டணியில் அடுத்தடுத்து படங்கள் உருவாகும்” எனக் கூறியுள்ளார்.
