"ப்ளீஸ் சாக்ஷியை காட்டி இரிடேட் செய்யாதீங்க" - கடுப்பில் உச்சத்தில் ரசிகர்கள்!

Last Modified செவ்வாய், 23 ஜூலை 2019 (15:58 IST)
பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஆரம்பத்திலிருந்தே கடுப்பேற்றும் காதலர்களாக இருந்து வரும் சாக்ஷி மற்றும் கவினை கண்டாலே பார்வையாளர்கள் வெறுப்பாகி வருகின்றனர். 


 
கடந்த சில நாட்களாகவே சாக்ஷி கவினின் காதல் கதையை மாற்றி மாற்றி காண்பித்து அனைவரையும் எரிச்சலாக்கி வந்தனர். இதனால் கடுப்பான ரசிகர்கள் தயவு செய்து இந்த காதல் கருமத்தை இத்துடன் நிறுத்துக்கொள்ளுங்கள் என்றெல்லாம் கமெண்ட்ஸ் செய்து வந்தனர். 
 
அதன் பிறகு கடந்த இரண்டு நாட்களாக பிக்பாஸ் புதுவிதமான டாஸ்க்களை கொடுத்து நிகழ்ச்சியை ஸ்வாரஸ்யமாக்கி வந்தனர். ஆனால் தற்போது வெளிவந்துள்ள மூன்றாவது ப்ரோமோ வீடியோவில் மறுபடியும் ஆரம்பித்துவிட்டனர். 
 
இந்த வீடியோவில் சாக்ஷி கருப்பு நிற உடையணிந்து வந்தவுடன்  மிகவும் அழகாக இருக்கிறாய் என  ரேஷ்மா கூற அருகில் இருந்த கவினும் ப்ளாக் ஷர்ட் ஒன்றை ட்ரை செய்துக்கொண்டிருந்தார். இதனை கண்ட ரேஷ்மா நீங்களும் பிளாக் ஆஹ் என கேட்க அது அவருக்கு புரியவில்லை உடனே அனைவரும் சிரிக்கின்றனர். சாக்ஷி பிளாக் கலர் அணிந்திருந்ததால் நீங்களும் அதே காலரா என கூறி கவினை அனைவரும் கிண்டலடித்து சிரித்தனர். 
 
இதனை கண்ட பார்வையாளர்கள் அவன் சும்மா இருந்தாலும் இந்த பொண்ணுங்க விட மாட்டாளுங்க போல, எது என்னமோ தயவு செய்து இவங்க காதல் கதையை மட்டும் திருப்பி போட்டு கொள்ளாதீங்க என்று கூறு கடுப்பாகியுள்ளனர். 
 


இதில் மேலும் படிக்கவும் :