1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sugapriya Prakash
Last Modified: திங்கள், 21 டிசம்பர் 2020 (15:33 IST)

இளையராஜாவ அனுமதிக்க முடியாது - பிரசாத் ஸ்டியோ அதிரடி!

பிரசாத் ஸ்டியோவுக்குள் இளையராஜாவை அனுமதிக்க முடியாது என்று பிரசாத் ஸ்டியோ சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
தமிழ் திரையுலகின் இசைஞானியாக வலம் வரும் இளையராஜா கடந்த 1970கள் முதலாக தனது அனைத்து படங்களுக்குமான இசையமைப்பை பிரசாத் ஸ்டுடியோவில் உள்ள ரெக்கார்டிங் ஸ்டுடியோவில் நடத்தி வந்தார். இந்நிலையில் கடந்த ஆண்டு முதலாக பிரசாத் ஸ்டுடியோவில் இளையராஜா இசையமைக்க அனுமதிக்கப்படாதது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
 
இந்நிலையில் தனக்கென தனி ரெக்கார்டிங் ஸ்டுடியோவை இளையராஜா உருவாக்கியுள்ளார். இந்நிலையில் பிரசாத் ஸ்டுடியோவில் உள்ள தனது இசை வாத்தியங்கள், உபகரணங்களை எடுத்து செல்லும் முன்னர் ஒரு நாள் அங்கு தியானம் செய்ய தன்னை அனுமதிக்க வேண்டும் என இளையராஜா உயர்நீதிமன்றத்தில் முறையிட்டுள்ளார். இதை விசாரித்த நீதிமன்றம் இளையராஜாவை அனுமதிப்பது குறித்து நாளைக்குள் பதிலளிக்க பிரசாத் ஸ்டுடியோவிற்கு உத்தரவிட்டது. 
 
இதற்கு தற்போது பிரசாத் ஸ்டுடியோ தரப்பில் பதில் அளிக்கப்பட்டுள்ளது. அதில், பிரசாத் ஸ்டியோவுக்குள் இளையராஜாவை அனுமதித்தால் கூட்டம் கூடி விடும் என்பதால் அவரை அனுமதிக்க முடியாது என்று சென்னை உயர்நீதி மன்றத்தில் பிரசாத் ஸ்டியோ சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.