புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: ஞாயிறு, 20 டிசம்பர் 2020 (10:07 IST)

இளையராஜா இயக்கத்தில் ரஜினி நடிக்க இருந்த திரைப்படம் – கடைசியில் என்ன ஆனது?

நடிகர் ரஜினிகாந்த் நடிக்கும் ஒரு படத்தை இசையமைப்பாளர் இளையராஜா இயக்க இருந்ததாக அவரே ஒரு நேர்காணலில் சொல்லியுள்ளார்.

நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் ஆர் சுந்தர்ராஜன் இயக்கத்தில் 1989 ஆம் ஆண்டு ராஜாதி ராஜா திரைப்படம் வெளியானது. அந்த படத்தில் ராதா மற்றும் நதியா ஆகியோர் கதாநாயகிகளாக நடிக்க ரஜினிகாந்த் இரட்டை வேடத்தில் நடித்திருந்தார். இளையராஜா இசையமைத்திருந்த இந்த படத்தை இளையராஜாவின் அண்ணன் பாஸ்கர் தயாரித்திருந்தார்.

முதலில் இந்த படத்தை இளையராஜா தானே இயக்குவதாக சொல்லி ராஜாதி ராஜா என தலைப்பையும் அவர்தான் சொன்னாராம். ஆனால் பின்னர் என்ன காரணத்தினாலோ அதை இயக்க முடியாமல் போனது. இதை இளையராஜாவே ஒரு நேர்காணலில் தெரிவித்துள்ளார்.