வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: சனி, 19 டிசம்பர் 2020 (16:15 IST)

ரஹ்மானும் ராஜாவும் இணைந்து ஒரு படத்துக்கு இசையமைத்தால்? கடைசி நேரத்தில் கைநழுவிய வாய்ப்பு!

தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமான இளையராஜாவும் ரஹ்மானும் சேர்ந்து ஒரு படத்துக்கு இசையமைக்க இருந்து அது கடைசி நேரத்தில் நடக்காமல் போயுள்ளது.

தமிழ் சினிமா மட்டுமல்லாமல் இந்திய சினிமாவுக்கே பெருமை தேடி தந்த இசையமைப்பாளர்கள் இளையராஜாவும், ரஹ்மானும். 1000 படங்களுக்கு மேல் இசையமைத்த ராஜாவும் இரண்டு ஆஸ்கர் விருதுகளைப் பெற்ற ரஹ்மானும் ஒரு படத்துக்கு சேர்ந்து இசையமைத்தால் எப்படி இருக்கும் என்பதே இவர்கள் இருவரின் ரசிகர்களின் உச்சபட்ச ஆசையாக இருக்கும். ஆனால் அப்படி ஒரு வாய்ப்பு ஏற்பட்டு அது கடைசி நேரத்தில் நடக்காமல் போனது தமிழ் சினிமாவின் துரதிர்ஷ்டமே.

இதுபற்றி சினிமா பத்திரிக்கையாளரான சித்ரா லட்சுமனன் ஒரு நேர்காணலில் ‘அதற்கான பேச்சுவார்த்தை நடந்து எல்லாம் முடியும் தருவாயில் அது நடக்காமல் போனது’ எனக் கூறியுள்ளார். ஆனால் எந்த படத்துக்காக எந்த இயக்குனருக்காக என்பது பற்றி அவர் குறிப்பிடவில்லை.