வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: வெள்ளி, 21 மே 2021 (14:32 IST)

கடலூர் கொரோனா நோயாளி மரணம் - எடப்பாடி பழனிச்சாமி வேதனை டிவிட்!

எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி கடலூர் கொரோனா நோயாளி மரணம் குறித்து தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவு. 

 
தமிழகம் முழுவதும் கொரோனா இரண்டாம் அலை தீவிரமடைந்துள்ள நிலையில் பல்வேறு இடங்களில் மருத்துவமனையில் படுக்கை பற்றாக்குறை எழுந்துள்ளது. இந்நிலையில் கடலூரில் கொரோனா பாதிப்பால் அனுமதிக்கப்பட்ட நபர் ஒருவருக்கு ஆக்ஸிஜன் வழங்க ஏற்கனவே ஆக்ஸிஜன் வழங்கப்பட்டிருந்த ராஜா என்ற நோயாளியிடம் இருந்து ஆக்ஸிஜன் எந்திரத்தை எடுத்து சென்றதாகவும், அதனால் ராஜா உயிரிழந்ததாகவும் வெளியான செய்தி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 
 
இந்நிலையில் எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி இது குறித்து தனது டிவிட்டர் பக்கத்தில் பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார். அவர் பதிவிட்டுள்ளதாவது, மூச்சுத்திணறல் ஏற்பட்டு கடலூர் அரசு  மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த திட்டக்குடி திரு.ராஜா  அவர்களுக்கு ஆக்சிஜன் அளவு போதுமானதாக உள்ளதா என்பதை உறுதி செய்யாமல்,ஆக்சிஜன் மாஸ்க்- சிலிண்டரை அரசு மருத்துவர் ஒருவரே எடுத்துத்சென்றதனால் உயிரிழந்ததுள்ளது மிகுந்த வேதனையளிக்கிறது.
 
அனைத்து அரசு மருத்துவமனைகள் மற்றும் தனியார் மருத்துவமனைகளிலும்  கொரோனா சிகிச்சை பெறுவோர்க்கு தேவையான அளவு ஆக்சிஜன் இருப்பு உள்ளதை உறுதி செய்வதிடவும், இது போன்ற சம்பவங்கள் இனியும் நிகழாமல் உயிர்களை காத்திட துரித நடவடிக்கைகளை தமிழக அரசு எடுத்திட வேண்டும்.