ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: வெள்ளி, 21 மே 2021 (13:52 IST)

கடலூரில் ஆக்சிஜன் கருவி எடுக்கப்பட்டதால் மரணம் - விசாரணைக்கு அரசு உத்தரவு!

கடலூரில் ஆக்சிஜன் கருவி எடுக்கப்பட்டதால் ராஜா என்பவர் உயிரிழந்ததாக எழுந்த புகாரில் விசாரணைக்கு தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. 

 
தமிழகம் முழுவதும் கொரோனா இரண்டாம் அலை தீவிரமடைந்துள்ள நிலையில் பல்வேறு இடங்களில் மருத்துவமனையில் படுக்கை பற்றாக்குறை எழுந்துள்ளது. இந்நிலையில் கடலூரில் கொரோனா பாதிப்பால் அனுமதிக்கப்பட்ட நபர் ஒருவருக்கு ஆக்ஸிஜன் வழங்க ஏற்கனவே ஆக்ஸிஜன் வழங்கப்பட்டிருந்த ராஜா என்ற நோயாளியிடம் இருந்து ஆக்ஸிஜன் எந்திரத்தை எடுத்து சென்றதாகவும், அதனால் ராஜா உயிரிழந்ததாகவும் வெளியான செய்தி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
 
இந்நிலையில், கடலூரில் ஆக்சிஜன் கருவி எடுக்கப்பட்டதால் ராஜா என்பவர் உயிரிழந்ததாக எழுந்த புகாரில் விசாரணைக்கு தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்க மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இயக்குநருக்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் உத்தரவிட்டுள்ளார்.