1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: சனி, 16 ஜூன் 2018 (16:15 IST)

“அந்த ஜெயில் எனக்குத்தான்” - பவர் ஸ்டார் சீனிவாசன்

‘பிக் பாஸ்’ ஜெயில் எனக்குத்தான் என பவர் ஸ்டார் சீனிவாசன் தெரிவித்துள்ளார்.



விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக இருக்கும் ‘பிக் பாஸ் 2’ நிகழ்ச்சி, நாளை முதல் தொடங்குகிறது. கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் இந்த நிகழ்ச்சியில், 14 பிரபலங்கள் கலந்து கொள்கின்றனர். யார் யார் கலந்து கொள்கின்றனர் என்பது இன்னும் தெரியாத நிலையில், பவர் ஸ்டார் சீனிவாசனும் இதில் கலந்து கொள்வதாக கூறப்படுகிறது.



இதுகுறித்து அவரிடம் கேட்டபோது, “பிக் பாஸ் வீட்டில் உள்ள அந்த ஜெயில் எனக்குத்தான். ஜெயில் தான் அமைதியான மனநிலையைக் கொடுக்கிறது. வாழ்க்கையில் பிரச்னை என்று எதுவுமே இல்லை. நீங்கள் பிரச்னை என்று நினைத்தால், அது பிரச்னையாகத் தெரியும். ஈஸி என்று நினைத்தால் ஈஸியாகத் தெரியும்” என்று கூறியுள்ளார் பவர் ஸ்டார் சீனிவாசன்.