புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : சனி, 6 ஜனவரி 2018 (15:14 IST)

கமல்ஹாசன் அநாகரீகமாக பேசுகிறார்; பொங்கி எழுந்த பவர் ஸ்டார்

திரைப்பட வர்த்தக கருத்தரங்கில் பேசிய பவர் ஸ்டார் சீனிவாசன், நடிகர் கமல்ஹாசன் அதிகமாகவும், அநாகரீகமாகவும் பேசுகிறார் என்று கூறயுள்ளார்.

 
நடந்து முடிந்த ஆர்.கே.நகர் தேர்தல் தொடர்பாக கமல்ஹாசன் தான் எழுதிய தொடரில் விமர்சித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. வாக்காளர்களை பிச்சைக்காரன் என்றும் வேட்பாளர்களை திருடன் என்றும் குறிப்பிட்டு இருந்தார். இதற்கு டிடிவி தினகரன் ஆதரவாளர்கள் கண்டனம் தெரிவித்தனர்.
 
ஆர்.கே.நகர் மக்கள் கமலுக்கு எதிராக சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில் திரைப்பட வர்த்தக கருத்தரங்கில் பேசிய பவர் ஸ்டார் சீனிவாசன் கமலுக்கு எதிராக பேசியது சினிமா வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
நடிகர் கமல்ஹாசன் ஆர்.கே.நகர் மக்களை அவமானப்படுத்தியுள்ளார். அவர் அதிகமாகவும், அநாகரீகமாகவும் பேசுகிறார் என்று கூறியுள்ளார். மேலும், நிகழ்ச்சி ஒன்றில் பவர் ஸ்டார் சீனிவாசன் கமல்ஹாசனுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் தற்போது வைரலாகி உள்ளது.