வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By CM
Last Updated : புதன், 30 மே 2018 (20:26 IST)

ஜூன் 10 ஆம் தேதி துவங்குகிறது பிக் பாஸ் 2

தெலுங்கு ‘பிக் பாஸ் 2’ நிகழ்ச்சி, ஜூன் 10 ஆம் தேதி முதல் ஒளிபரப்பாக இருக்கிறது என அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.
 
கடந்த வருடம் தென்னிந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்ட ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சி, ரசிகர்களிடையே ஏகோபித்த வரவேற்பைப் பெற்றுள்ளது. ஒவ்வொரு மொழியிலும் அதற்கெனத் தனி ரசிகர் வட்டம் உருவாகிவிட்டது. அடுத்த சீஸன் எப்போது வரும் என அனைவரும் காத்திருக்கும் நிலையில், அதற்கான அறிவிப்புகள் வரிசையாக வெளியிடப்பட்டுக் கொண்டிருக்கின்றன.
 
தெலுங்கு ‘பிக் பாஸ் 2’ நிகழ்ச்சியை, நடிகர் நானி தொகுத்து வழங்குகிறார். ‘நான் ஈ’, ‘வெப்பம்’, ‘ஆஹா கல்யாணம்’ உள்ளிட்ட தமிழ்ப் படங்களில் நடித்தவர் இவர். 100 நாட்கள் ஒளிபரப்பாகும் இந்த நிகழ்ச்சியில், மொத்தம் 16 பிரபலங்கள் கலந்து கொள்கின்றனர்.
 
மா டிவியில் ஒளிபரப்பாகும் இந்த நிகழ்ச்சி, திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 9.30 மணிக்கும், சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் இரவு 9 மணிக்கும் ஒளிபரப்பாக இருக்கிறது.