திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வியாழன், 22 மார்ச் 2018 (11:55 IST)

‘பிக் பாஸ்’ சீஸன் 2வைத் தொகுத்து வழங்குகிறார் கமல்ஹாசன்

‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியின் இரண்டாவது சீஸனையும் கமல்ஹாசனே தொகுத்து வழங்குவதாக கூறப்படுகிறது. விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சி, தமிழக மக்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது. திரையில் மட்டுமே பார்த்த நடிகர் – நடிகைகளின் உண்மை முகத்தைப் பார்க்கக் கிடைத்த வாய்ப்பும், கமல்ஹாசன் தொகுத்து வழங்கியதும் இந்த நிகழ்ச்சிக்குப் பெரிய வரவேற்பாக அமைந்தன.



இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட எல்லா போட்டியாளர்களுக்குமே நல்ல பப்ளிசிட்டி கிடைத்துள்ளது. அதுவும் குறிப்பாக ஓவியாவுக்கு கிடைத்த பப்ளிசிட்டி, யாருமே எதிர்பார்க்காத ஒன்று. ‘ஓவியா ஆர்மி’ ஆரம்பித்து, அவரைக் கொண்டாடி வருகின்றனர்.சென்னைக்கு அருகில் உள்ள ஈவிபி பொழுதுபோக்குப் பூங்காவில் இதற்கான செட் போட்டு ஷூட்டிங் நடத்தப்பட்டது. ஆரவ், ஓவியா, சினேகன், வையாபுரி, காயத்ரி ரகுராம், பிந்து மாதவி, ஹரிஷ் கல்யாண், ஆர்த்தி, அனுயா, காஜல், கணேஷ் வெங்கட்ராம், கஞ்சா கருப்பு, ரைஸா, பரணி, ஷக்தி, சுஜா வருணி, ஜூலி, நமிதா, ஸ்ரீ என மொத்தம் 19 பேர் போட்டியாளர்களாகக் கலந்து கொண்டனர்.



இதில், ஆரவ் டைட்டில் வின்னராகத் தேர்வு பெற்றார். இந்நிலையில், இந்த நிகழ்ச்சியின் சீஸன் 2 வருகிற ஜூன் மாதம் முதல் தொடங்க இருக்கிறது. கமல்ஹாசன் கட்சி ஆரம்பித்து பிஸியாகிவிட்டதால், இந்த நிகழ்ச்சியை யார் தொகுத்து வழங்கப் போகிறார் என்ற ஆவல் எல்லோருக்கும் இருந்தது. இந்நிலையில், கமல்ஹாசனே மறுபடியும் தொகுத்து வழங்குகிறார் என்கிறார்கள்.