1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: வெள்ளி, 25 ஜூலை 2025 (11:40 IST)

கூலி LCU வில் வராது… கமல் சாரும் இல்லை.. ஓப்பனாக சொன்ன லோகேஷ்!

கூலி LCU வில் வராது… கமல் சாரும் இல்லை.. ஓப்பனாக சொன்ன லோகேஷ்!
தமிழ் சினிமாவில் இன்று மோஸ்ட் வாண்டட் இயக்குனராக அனைத்து ஹீரோக்களாலும், தயாரிப்பு நிறுவனங்களாலும் விரும்பப்படுகிறார் லோகேஷ் கனகராஜ். அதற்குக் காரணம குறுகிய காலத்தில் முன்னணி நடிகர்களை வைத்து சூப்பர் ஹிட் படங்களை அடுத்தடுத்துக் கொடுத்து வருகிறார்.

தனது இயக்குநர் பயணத்தை "மாநகரம்" திரைப்படம் மூலம் தொடங்கினார். அதன் பின்வரும்  "கைதி", "மாஸ்டர்", "விக்ரம்", "லியோ" போன்ற வெற்றிப்படங்களை இயக்கி ரசிகர்களை பெரிதும் கவர்ந்தவர். தற்போது ரஜினிகாந்த் நடிக்கும் ‘கூலி’ படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தின் ஷூட்டிங் முடிந்து ப்ரமோஷன் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில் கூலி படம் பற்றி பேசியுள்ள அவர் “கூலி ஒரு தனித்த படம் (Stand alone) படம். இது LCU வில் வராது.  இது ரஜினி சாருக்காகவே எழுதப்பட்ட கதை. அதே போல கமல் சாரையும் நான் ‘கூலி’ படத்தில் கொண்டுவரவில்லை” எனக் கூறியுள்ளார்.