வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By CM
Last Updated : வியாழன், 1 மார்ச் 2018 (22:35 IST)

அரசியல்வாதிகளை காமெடியன்களாக்கும் விஜய் டிவி

அரசியல்வாதிகளை, காமெடி நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினர்களாக அழைத்து வருகிறது விஜய் டிவி.

 
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் காமெடி நிகழ்ச்சி ‘கலக்கப்போவது யாரு’. சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை இரவு 8.30 மணிக்கு இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது. ரக்‌ஷன் மற்றும் ஜாக்குலின் தொகுத்து வழங்கும் இந்த நிகழ்ச்சியின் நடுவர்களாக ஈரோடு மகேஷ், மிமிக்ரி சேது, பிரியங்கா, பாலாஜி, ஆர்த்தி ஆகியோர் இருந்து வருகின்றனர்.
 
இந்த நிகழ்ச்சியில், இதுவரை இல்லாத புதுமையாக அரசியல்வாதிகளை சிறப்பு விருந்தினர்களாக அழைத்து வந்துள்ளனர். அதிமுகவில் உள்ள நாஞ்சில் சம்பத், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இருவரும் வருகிற வாரத்தில் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டுள்ளனர்.
 
ஒருவேளை இவர்கள் அரசியல்வாதிகளல்ல, காமெடியன்கள் என்று சொல்லாமல் சொல்கிறார்களோ..?